2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கற்பிட்டி விபத்தில் இருவர் பலி: 34 பேர் காயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்,எம்.என்.எம். ஹிஜாஸ்



கற்பிட்டி-புத்தளம் வீதியில் கரம்பை எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர்.

  வானும் லொறியும் சற்று முன்னர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவமே பலியாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவில தேவாலயத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வான் ஒன்றும், பாலாவியிலிருந்து சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றுமே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளது.

இதில் வானில் பயணித்த சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த நில்மினி தில்ருக்சி (வயது 16) மற்றும் லொறியில் பயணித்த கரம்பை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் முனாப் (வயது 27) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். 

காயமடைந்தவர்களுள் 19 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதோடு அவர்களுள் பாதிரி ஒருவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் மூவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X