2025 மே 24, சனிக்கிழமை

அலரி விதை உட்கொண்ட 15 மாணவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 05 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, எஸ். எம். மும்தாஜ், ஜூட் சமந்த)

பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட அலரி விதைகளை உண்ட தரம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அலரி விதைகளை உட்கொண்ட மாணவர்கள், வாந்தி, வயிற்றோட்டம் மற்றும் மயக்கம் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், ஆணமடுவ, மஹாகும்புக்கடவல கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

மேற்படி அலரி விதைகளை உட்கொண்ட மாணவர்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பிய நிலையில், நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மஹாகும்புக்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X