2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வில்பத்து சரணாலயத்தில் மேலும் 150,000 ஹெக்டேயர் பகுதி பயணிகளுக்காக பார்வையாளர்களுக்காக திறக்கப்படும

Super User   / 2012 ஜனவரி 07 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சபூர்தீன்)

வில்பத்து தேசிய சரணாலயத்தில்  மிருகங்களைப் பார்வையிடுவதற்காக இதுவரையில் அனுமதியளிக்கப்படாதிருந்த 150,000 ஹெக்டேயர் நிலப் பகுதியை சுற்றுலாப் பார்வையாளர்களுக்காக திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கமநல சேவைகள் மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் ஆலோசனைப்படி விலங்குகள் திணைக்களம் இந்நடவடிக்கையை எடுத்து வருகிறது.

'தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் இதுவரையில் பயணிக்காத வடபகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தந்திரிமலை பிரதேசத்தின் ஊடாக வில்பத்துவ தேசிய சரணாலயத்திற்குள் நுழைவதற்கான புதிய 100 கிலோ மீற்றர் வீதி, 07 சுற்றுலா பங்களாக்கள், பார்வையாளர் மத்திய நிலையங்கள், வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் சேதமுற்றுக் காணப்படும் 20 குளங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

வில்பத்துவ வடக்கு பிரதேச நுழைவாயல் அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவிடப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Tuesday, 10 January 2012 06:54 AM

    அப்படியன்றால் நாங்கள் இனி வேட்டையாட வில்பத்து சரணாலயம் செல்ல முடியாதா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X