2025 மே 14, புதன்கிழமை

172 கைதிகள் நீதிமன்றில் ஆஜர்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன் 

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பெயரில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 172 சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை (24) அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத் நீதிமன்றம் மற்றும் மேலதிக மஜிஸ்திராத் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனால் அநுராதபுரம் நீதிமன்ற வளாகம் சிறைச்சாலை கைதிகளினால் நிரம்பிக் காணப்பட்டது.

இதன் காரணமாக நேற்றைய தினம் அநுராதபுரம் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தோடு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

40 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 18 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பாதுகப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X