2025 மே 09, வெள்ளிக்கிழமை

கருவலகஸ்வெவ பிரதேச சபை உப-தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை

Kanagaraj   / 2014 ஜூன் 17 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உப-தலைவர் உள்ளிட்ட 18 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவானும் நீதிபதியுமான ரங்க திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் உப-தலைவர் உள்ளிட்ட 07 பேருக்கு தலா 5000 ரூபா தண்டம் விதித்ததுடன் அவர்களை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவித்தார்.

ஏனைய 11 சந்தேகநபர்களையும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

சாலியவெவ பொலிஸில் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரியின் மீது கடந்த 6 ஆம் திகதி தாக்குதல் நடத்தியமை, அவரினால் கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றப்பட்டிருந்த டிரக்டர் வண்டி மற்றும் அதன் சாரதியை பலவந்தமாக கடத்தியமை தொடர்பில் கருவலகஸ்வௌ பிரதேச சபையின் உப-தலைவர் உள்ளிட்ட எழுவர் கைது செய்யப்பட்டனர்.

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உப-தலைவர் கைது செய்யப்பட்டமையை கண்டித்து பொலிஸாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 18 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை 17 ஆம் திகதி வரையிலும் (இன்று) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X