2025 மே 23, வெள்ளிக்கிழமை

20 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீதேறி இளைஞரொருவர் ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                          
               
                                                                                           (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

20 அடி உயரமாக தொலைத்தொடர்பு கோபுரமொன்றில் உச்சியில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றது.

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையவரென பொலிஸார் தன்னை கைது செய்துவிட்டதாகவும் பொலிஸாரின் இந்நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த இளைஞரை கீழே இறக்கியதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான மேற்படி இளைஞரை நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X