Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
கல்பிட்டி பிரதேச குடிநீர் விநியோக புனர்நிர்மாணப் பணிகளுக்காக 250 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம். எச். எம். மின்ஹாஜ் தெரிவித்தார்.
உள்ளூராட்சி அமைச்சினூடாக ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கல்பிட்டி பிரதேச சபை அபிவிருத்திக்காக 500 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் குடிநீர் விநியோக புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளன.
தற்போதுள்ள குடிநீர் விநியோக குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குடிநீர் குழாய்கள் பொறுத்தப்படவுள்ளன.
சுமார் 35 வருட பழமை வாய்ந்த கல்பிட்டி பிரதேச குடிநீர் விநியோக குழாய்கள் இதன் மூலம் மாற்றப்படவுள்ளதாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம். எச். எம். மின்ஹாஜ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago