2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

குறை வருமானம் பெறும் மக்களுக்காக அநுராதபுரத்தில் 2,500 வீடுகள் நிர்மாணம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் 2500 வீடுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 250 வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. பதவிய, கெப்பித்திகொள்ளாவ, ஹொரவப்பொத்தானை, விலச்சிய மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதி மக்களுக்கு இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக அநுராதபுரத்திலிந்து ஒயாமடுவ பகுதி வரையுள்ள சகல குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படுவதுடன் 100 வீடுகள் திட்டமொன்றும் ஒயாமடுவ பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு இலட்சம் ரூபா தொடக்கம் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தவை. இதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வீடுகள் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X