2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளத்தில் 3 கிராமசேவகர் பிரிவுகளை மாநகர சபையுடன் இணைக்க தீர்மானம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் பிரதேச சபையிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் மூன்று கிராம சேவகர்கள் பிரிவை புத்தளம் மாநகர சபையுடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் பிரதேச சபையிற்குட்பட்ட மணல்தீவு, முள்ளிப்புரம், ரத்மல்யாய ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிளே இவ்வாறு இணைக்கப்படவுள்ளன.
புத்தளம் நகர சபையினை, புத்தளம் மா நகர சபையாக மாற்றுவதற்குரிய முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுவரும் இச் சந்தர்ப்பத்தில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே மேற்படி தீர்மானத்தினை புத்தளம் பிரதேச சபை எடுத்துள்ளதாக புத்தளம் நகர சபை தலைவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X