Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
புத்தளம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலையுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் 37 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், பொலிஸ் கான்ஸ்டபிளான நவரத்ன பண்டாரவின் கொலையுடன் தொடர்புடையதான ஐவரும் உள்ளடங்குவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதான பிரதான சந்தேகநபர்கள் ஐவர் இன்று புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த மோதல் சம்பவத்தின் போது பொலிஸாரது மோட்டார் சைக்கிள்களை எரித்து சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கற்பிட்டி – புத்தளம் பிரதான வீதியை மறித்து பொலிஸார் மீது நேற்று திங்கட்கிழமை மாலை தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த சனிக்கிழமை காலை, கற்பிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியசாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உரிய விசாரணைகளை அடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.'
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
sathya Wednesday, 24 August 2011 03:22 AM
பொது மக்கள் எதிர்ப்பில் எப்படி சில நபர்கள் கைது செய்யப்பட முடியும்????!!!! இது மிகவும் ஆபத்தான அறிகுறி,நாடு எங்கு செல்கிறது.
Reply : 0 0
Ashiq Wednesday, 24 August 2011 02:43 PM
ஏன் கற்பிட்டி வைத்தியசாலைக்குள் கலகம் ஏற்பட்டது ?????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago