2025 மே 09, வெள்ளிக்கிழமை

4வயது சிறுவன் கடத்தல்: ஐவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனான தமிந்து யஷின் ஏக்கநாயக்கவை கடத்திசென்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஐவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சிறுவனை மறைத்து வைத்துக்கொண்டு அவர்கள், ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலே ஒக்டோபர் 1ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் டீ.எம் ருவன் தம்மிக்க மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

முகங்கள் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நிலையில் ஜூலை 28ஆம் திகதி திங்கட்கிழமை இரவு, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரே வீட்டிலிருந்த பெற்றோரை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனை கடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X