2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உழவு இயந்திரம் தடம் புரண்டதில் சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஆனமடு ஊரியாவ பகுதியில் சிறிய ரக உழவு இயந்திர  வண்டியொன்று தடம் புரண்டதில் அதில் பயணித்த நான்கு வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்ததாக  ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று  சனிக்கிழமை மாலை உறவினர்களுடன் சிறிய ரக உழவு இயந்திர   வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றது. இதில் காயமடைந்த சிறுவன்  உடனடியாக ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இச்சிறுவன் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X