2025 மே 22, வியாழக்கிழமை

கல்வி அபிவிருத்திக்காக 438 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்காக 438 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலுள்ள எட்டு கல்வி வலயங்களிலும் 775 பாடசாலைகள் உள்ளதோடு 2 இலட்சத்து 64 ஆயிரத்து 499 பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். 14 ஆயிரத்து 821 ஆசிரியர்களும் கடமையிலுள்ளனர்.

இந்நிதி மூலம் மாணவர்களின் கல்வி நலனுக்காக பாடசாலைகளுக்குத் தேவையான தளபாடப் பொருட்களை வழங்குதல், பாடசாலைகளை  புனரமைப்பு செய்தல், மின்சாரத்தை பெற்றுக் கொடுத்தல், கணினி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X