2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குருநாகல் ஹோட்டலில் பொலிஸார் முற்றுகை: 48 ஜோடிகள் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குருநாகலில் ஹோட்டலொன்றில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை மூலம்,  ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த இளம்பராய பாடசாலை மாணவர்கள் உட்பட 40 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த பல முறைப்பாடுகளையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முற்றுகை மேற்கொள்ளப்பட்ட வேளை ஹோட்டலின் 54 அறைகளில் 48 அறைகள் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்ததாகவும் இந்த அறைகள் அதிகமாக விபசாரத்திற்கு அல்லது மாணவர்ள் உட்பட ஜோடிகள் சந்திப்பதற்கான இடமாக பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹோட்டலின் முகாமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை கைது செய்யப்பட்ட ஜோடிகள்  கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .