2025 மே 10, சனிக்கிழமை

முந்தலில் விபத்து 5 பேர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல் 15 ஆம் மைல் கல் பகுதியில்  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக முந்தல்  பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பின்னால் வந்த மீன் லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன்  மோதியதால் மீன் லொறியின் நடத்துனரும் பேருந்தில் பயணித்த 4 பேரும்  முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீன் லொறியின் நடத்ததுனர் நிலையில்; மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும். அத்துடன் பேருந்தில்  பயணித்த 4 பேரில் ஒருவர்  சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனைய மூவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X