2025 மே 26, திங்கட்கிழமை

கொழும்பிலிருந்து சென்ற பஸ் குடைசாய்வு; 6 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 07 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸொன்று  இன்று திங்கட்கிழமை அதிகாலை குடைசாய்ந்ததில் குறித்த பஸ்ஸில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ - 9 வீதியின் (144 ஆவது மைல்கல்) இக்கிரிகொள்ளாவ பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்தவர்களில்  3 பேர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.திஸாநாயக்க தெரிவித்தார்.
    
25 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மேற்படி பஸ், முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே  வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்தது.

இவ்விபத்து இடம்பெற்றவுடன் பஸ்ஸின் சாரதி  அவ்விடத்தை விட்டு  தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும்  மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X