2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளத்தில் 6 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான 58 வழக்குகள்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் சிறுவர் நன்னடத்தை பாதுகாப்பு பிரிவினால் இவ் வருடம் ஜூலை மாதம் வரை 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 சிறுவர்கள் சிறுவர் நன்னடத்தை இல்லத்துக்கும், பெற்றோர்களிடமும், பாதுகாவலர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் இது கடந்த 2010 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 வீதம் வரையிலான பாரிய அதிகரிப்பினை காட்டுவதாகவும் புத்தளம் சிறுவர் நன்னடத்தை, பாதுகாப்பு சேவை பொறுப்பதிகாரி எல்.பி. குணவர்தன தெரிவித்தார்.

2010ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 சிறுவர்களே சிறுவர் நன்னடத்தை இல்லத்துக்கும், பெற்றோர்களிடமும், பாதுகாவலர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்

இவர்களில் 95 வீதமானர்கள் தாய் மற்றும் தந்தையிடையிலான குடும்ப பிரச்சினை மற்றும் பெற்றோர் வெளிநாட்டுக்கு சென்றமையினால் பாதிக்கப்பட்டவர்களாவர் என அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X