2025 மே 08, வியாழக்கிழமை

வாவி பெருக்கெடுப்பு; 600 குடும்பங்கள் பாதிப்பு

George   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம் பெரியகுளம் வாவி பெருக்கெடுத்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 10 கிராமங்களை சேர்ந்த 600க்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக்காரணமாக அங்குள்ள வாவிகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் சில குளங்களில் நீர் பெருக்ககெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை(02) காலை புத்தளம் பெரியகுளம் வாவி பெருக்கெடுத்ததையடுத்து தில்லையடி, ரத்மல்யயாய, பெரியகுளம், பிரதேசத்தில் காணப்படும் வீட்டு தொகுதிகள், அடபனாவிலுவ, பாலாவி, புத்தளம் களப்பினை அண்டிய கிராமம், பாம்குளம் கிராமம் என்பன நீரில் மூழ்கியுள்ளன.

இப்பிரதேசங்களில் காணப்படும் வீடுகளில் மூன்று அடி உயரத்துக்கு நீர் நிறைந்துள்ளது.

மேலும், அந்த கிராமங்களுக்கு செல்லும் சகல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X