2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளத்தில் 60,302 பேர் சமுர்த்திப் பயனாளிகள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள  மக்களுக்கான சமுர்த்தி திட்டத்தில்  60 ஆயிரத்து 302 பேர்  பயனாளிகளாக உள்ளதுடன், இவர்களுக்காக 33.7 மில்லியன் ரூபாய் நிதியை  பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாக புத்தளம் மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் எஸ்.பீ.சந்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை,  கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் புத்தளம் மாவட்டத்தில் தலா ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் 500 ரூபாவுக்கான போஷனை முத்திரைகள் வழங்கப்படுகின்றன. மொத்தமாக 16,500 தாய்மார்கள் இந்த போஷனை முத்திரைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இதற்காக  மாதாந்தம் 2.12 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமுர்த்தி வங்கிச் சங்கத்தினூடாக அங்கத்தவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், இக்கடன் உதவி மூலம் அவர்கள் சுயதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளமுடியுமென சந்தநாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X