2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் 841 குடும்பங்கள் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                       

அநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக  இதுவரையில் 841 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு இவர்கள் 10  நலன்புரி நலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக  அநுராதபுரம் மாவட்ட அனர்த்;த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் மத்திய நுவரகம் பிரதேச செயலகம் மற்றும் கிழக்கு நுவரகம் பிரதேச செயலகங்களே பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாச்சியாதீவு குளம், மஹகனந்தரா வாவி, ராஜாங்கனை, கலாவாவி, பதவிய உட்பட பல பெரிய குளங்களின் வான் கதவுகள் பலவும் திறக்கப்பட்டுள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X