2025 மே 24, சனிக்கிழமை

வீடொன்றில் அடைக்கலம் கோரிய பெண் 9 மாத பெண் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 15 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றில் அடைக்கலம் கோரிய பெண்ணொருவர் தனது 9 மாத பெண் குழந்தையை கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவமொன்று புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை கல்கமுவ, மிகலாவ சிறுவர் இல்லத்தில் விடுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ஹேசாந்த டி மெல் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மணல்குன்று பிரதேச வீடொன்றுக்கு தனது குழந்தையுடன் சென்றுள்ள பெண்ணொருவர் இரவு மாத்திரம் தங்குவதற்கு இடம் கோரியுள்ளார்.

அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் அங்கு தங்கிருந்துள்ள மேற்படி பெண், அதிகாலையில், தனது குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குழந்தை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே அக்குழந்தையை சிறுவர் இல்லத்தில் விடுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், குழந்தையை கைவிட்டுச் சென்ற பெண்ணைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (ஜூட் சமந்த)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X