2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளத்தில் 936 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 08 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில்  936 கடைகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் இதன்போது 280,000  ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அந்த மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடைகளில் விலைப்பட்டியல் இடப்படாமை, கூடுதலான விலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்தமை,  காலவதியான பொருட்களை விற்பனை செய்தமை போன்ற செயல்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.  

இக்காலப்பகுதியில் சீமெந்தை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரு கடை உரிமையாளர்களுக்கு எதிராகவும் சீமெந்தை பதுக்கி வைத்திருந்தமைக்காக ஒரு கடை உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையும் இதில் அடங்குவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X