Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 21 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
விவசாயிகள் தமது விவசாய காணிகளுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த சுற்றுநிருபத்தை இரத்துச் செய்துவிட்டு, புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிடுவதற்கு மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை தனது அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் புத்தளத்துக்கு வருகை தந்த மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறித்த சுற்றுநிருபம் தொடர்பில் மாற்றத்தை செய்யுமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்.
'குறித்த பகுதியில் உள்ள விவசாயிகள் தாம் மேற்கொள்ளும் விவசாய நிலங்களுக்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, விவசாயத் திணைக்களம், காணி திணைக்களம், போன்ற அலுவலகங்களின் அனுமதியைப் பெற்ற பின்னர்தான் விவசாயம் மேற்கொள்ளும் காணிகளுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சுற்றுநிருபமாகும்.
இந்த சுற்றுநிருபமானது கம்பனிகள், தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பை பெற்றுக்கொள்ளும் முறையாகும். இதுவரை காலமும் கற்பிட்டி பிரதேச விவசாயிகள் குறித்த சுற்றுநிருபத்தையே கடைப்பிடித்து வந்தனர். எனினும், குறித்த சுற்றுநிருபத்தினால் பல்வேறு அடிசளகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, குறித்த சுற்றுநிருபத்தை உடனடியாக இரத்து செய்துவிட்டு, தமது விவசாய காணிகளுக்கு மின்சாரம் பெற்றுக்கொள்வதில் விவசாயிகளுக்கு பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாத வகையில் புதிய சுற்றுநிருபமொன்றை உடன் வெளியிடுமாறும் உத்தரவிட்டார்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago