2025 மே 06, செவ்வாய்க்கிழமை

12 மீனவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை

Niroshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்திலுள்ள சிறுகடலில் தடை செய்யப்பட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களை இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுகடல் பிரதேசத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை மேற்கொண்டார்கள்  என்ற குற்றச்சாட்டின் கீழ் புத்தளம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், கடற்படையினரின் உதவியுடன் குறித்த 12 மீனவர்களையும் கைது செய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு வன்னாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்த பொலிஸார்இ குறித்த மீனவர்கள் அனைவரையும் இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தனது அதிருப்த்தியை வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X