2025 மே 19, திங்கட்கிழமை

02 துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 22 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

அனுமதிப்பத்திரமின்றி 02 துப்பாக்கிகளையும்  தோட்டாக்களையும் வைத்திருந்ததாகக் கூறப்படும் தோட்டமொன்றின் பணியாளர்கள் இருவரை  வண்ணாத்திவில்லு 12ஆம் கட்டைப் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்ததாக  வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிகளுடன் வந்த இருவர் அப்பிரதேசத்திலுள்ள காணி உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்துவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்குச் சென்று இவர்கள் இருவரையும் கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து துப்பாக்கிகளையும்  தோட்டாக்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார்.   இவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவரா அல்லது சட்டப்படி இராணுவத்திலிருந்து விலகியவரா என்பது தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜானக விதானகே தலைமையிலான குழுவினர்  விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X