2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

05 கடைகளிலிருந்து பாவனைக்குதவாத பழங்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


சிலாபம் நகரிலுள்ள  பழக்கடைகளில் வியாழக்கிழமை (13) மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது, 05 கடைகளிலிருந்து பாவனைக்கு உதவாத பழங்களை கண்டுபிடித்ததாக சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் சுற்றாடல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அநேகமான பழக்கடைகளில் பாவனைக்கு உதவாத பழங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து  கடைகளிலும் பழங்கள் விற்கும்; சிறிய ரக லொறிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.  இதன்போது பழுதடைந்த, பூச்சிகள் மற்றும் எலிகள் உட்கொண்ட  பழங்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளை கண்டுபிடித்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்தக் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சிலாபம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.விக்ரமசூரியவின் ஆலோசனைக்கு அமைய சுற்றாடல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சி.டி.சேனாநாயக்க தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .