Editorial / 2020 ஜூலை 19 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
புத்தளம்- ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தொடர்பில், புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்னறனர்.
மேற்படி சிறுமிக்கு அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனையடுத்து இச்சிறுமி கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளாரென, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் தாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, அப்பெண் இரண்டு முறை திருமணம் செய்துள்ளதுடன், 8 பிள்ளைகள் உள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பெண், தவறான தொடர்பை பேணி வந்த நபரொருவரே, இக்குற்றச் செயலுக்கு காரணமானவர் எனத் தெரியவந்துள்ளதுடன், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026