2025 ஜூலை 17, வியாழக்கிழமை

11 ஆயிரம் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு

Thipaan   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்

தேசத்துக்கு நிழல் எனும் தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழான புத்தளம் மாவட்ட பிரதான வைபவம் முந்தல் பிரதேச செயலகத்துகுட்பட்ட குடியிருப்பு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

முந்தல் பிரதேச செயலாளர் ஏ. எம். சீ. எம். பிரேமசூரிய தலைமையில், ஆரம்பமான இந்நிகழ்வின் போது, காலை 10.41 மணி சுபநேரத்தில் 11 ஆயிரம் கண்டல் தாவரங்கள் அப்பிரதேசத்தின் களப்பினுள் நடப்பட்டன.

பசுமை நிறைந்த நாடு, ஒளிமயமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்றைய நிகழ்வில், புத்தளம் மாவட்ட திட்டப் பணிப்பாளர் திருமதி சந்தநாயக்க, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பணிப்பாளர், முந்தல், கல்பிட்டி பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர், புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர், வேர்ல்ட் விசன் லங்கா நிறுவனத்தின் வடமேல், வடமத்திய மாகாணப் பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் மற்றும் முந்தல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்டத்துக்கான கண்டல் தாவரங்களை வேர்ல்ட் விஷன் லங்கா நிறுவனம் வழங்கியிருந்தது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X