2025 ஜூலை 16, புதன்கிழமை

13 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய 19 வயது இளைஞன் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 10 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பட்டி பிரதேசத்தில் 13 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயது இளைஞரொருவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோரினால் முந்தல் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே குறித்த பிரதேசத்தினை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியும் சந்தேக நபரும் காதலித்து வந்ததாகவும் சம்பவ தினம் குறித்த பிரதேசத்திலிலுள்ள பாழடைந்த வீட்டிலேயே இக்குற்றச்செயல் நடைபெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர், புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X