2025 மே 09, வெள்ளிக்கிழமை

13 வயது சிறுமி கர்ப்பம்: தந்தை தலைமறைவு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தனது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கியதாகக் கூறப்படும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகல்ல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி அப்பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வரும் நிலையில் தனது காலில் ஏற்பட்ட காயம் ஒன்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள் அச்சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் சிறுமியை விசாரித்த போது, கடந்த இரு வருடங்களாக தனது தந்தை தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாக சிறுமி வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான சிறுமியின் தந்தை தற்போது பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் ஏற்கனவே கொலை குற்றச்சாட்டுச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் இருந்தவரென்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

மாதம்பை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X