2025 மே 23, வெள்ளிக்கிழமை

14 வயது சிறுமி மீது வல்லுறவு இளைஞன் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)   
                  
14 வயதுடைய சிறுமியொன்றை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியன் காதலன் என்று குறிப்பிடப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை நகரத்திலுள்ள தனியார் டியூஷன் வகுப்பிற்குச் சென்ற சிறுமி, குறித்த நேரத்திற்குள் வீடு திரும்பாமையினால் பெற்றோர் மிஹிந்தலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X