2025 ஜூலை 14, திங்கட்கிழமை

15 வயது சிறுமி வல்லுறவு: இராணுவ வீரர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மனவளர்ச்சி குன்றிய 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை வெள்ளிக்கிழமை (20) அதிகாலை கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பொல நாகோல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதன்குளம் விஹேன்கட்டு உள்வீதி ஒன்றில் வைத்து  வியாழக்கிழமை மாலை (19) இக்குற்றத்தை புரிந்  சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாய் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள முந்தல் பொலிஸார் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .