2025 மே 14, புதன்கிழமை

15 வயதுடைய மாணவி துஷ்பிரயோகம்: 17 வயதான மாணவன் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்)

வென்னப்புவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவியான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதுடைய மாணவன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பிரதேசத்திற்கு அண்மையில் வசிக்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

வென்னப்புவ கிரிஅமட்டியான பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிக்கும் சந்தேக நபரான மாணவனுக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்துள்ளது.

இத்தொடர்பின் காரணமாக கடந்த மே மாதம் இவர்கள் இருவரும் வென்னப்புவ தும்மலசூரிய கடற்கரையோரத்தில் வைத்து சந்தித்துக் கொண்ட போது மாணவியை சந்தேக நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவத்தின் பின்னர் தொடர்ச்சியாக சந்தேக நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து சந்தேக நபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை வைத்திய பரிசோதனைக்காக மாராவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ள வெள்ளப்புவ பொலிஸார் சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .