2025 மே 09, வெள்ளிக்கிழமை

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை தேடி வலைவீச்சு

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாடசாலைசெல்லும் 15 வயதுடைய சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி அச்சிறுமியைக் கர்ப்பமாக்கிவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இளைஞரைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், ஆனமடு முதலைக்குளி எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி ஒருத்தி கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு முயற்சிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆனமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கியது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இவ்விடயங்கள் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவிததனர்.

சிறுமி ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டபோது,  அவர் ஒன்றரை மாதக் கர்ப்பிணி என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

ஆனமடு சிலாபம் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் தனது வீட்டில் உணவு உட்கொண்டு வந்ததாகவும், இதனிடையே அவ்விளைஞருக்கும் தனக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தாம் இருவரும் ஒன்றாக இருந்ததாகவும் குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான தனது காதலர் பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற விடயம் மாத்திரமே தனக்குத் தெரியும் எனவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான இளைஞன் தற்போது தனது பணிகளை முடித்துக் கொண்டு அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள ஆனமடு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X