Editorial / 2017 நவம்பர் 01 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, முள்ளிப்பொத்தான சேனவல்லிக்குளம் பகுதியில், பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவரையும், ரி-56 ரக துப்பாக்கியில் சுட்டுப்படுகொலைச் செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்விருவரும், தங்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதையடுத்தே, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம். தலா 18 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, நேற்று (31) தீர்ப்பளித்தது.
இலட்சுமனன் மோகன் மற்றும் காதிலிங்கம் விஜேகுமார் ஆகிய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago