2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அஷ்ரப் நினைவுதினத்தையொட்டி புத்தளத்தில் பல நிகழ்ச்சிகள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் மர்ஹூம் எம். எச். எம்.அஷ்ரப்பின் மறைவின் 10 ஆண்டு நிறைவையொட்டி இன்று வியாழக்கிழமை புத்தளத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மர்ஹூம் எம். எச்.எம்.அஷ்ரப் கடந்த 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி அரனாயக்காவில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் பலியாகி இன்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றது.

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக் கிராமத்தின் ஜூம்ஆப் பள்ளியில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கத்தமுல் குர்ஆன் தமாம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான நூர்தன் மசூர் தலைமையில் இடம்பெறுகின்றது.

வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியாவின் ஏற்பாட்டில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கடையாமோட்டையிலுள்ள அவரது இல்லத்திலும் கத்தமுல் குர்ஆன் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் எஹியா தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளத்தில் இயங்கும் கல்வி அபிவிருத்திக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு (ஒபெட்) நினைவுதானமொன்றினை ஏற்பாடு செய்து வருவதாக அதன் தலைவர் என்.டி.நபீல் தெரிவித்தார். இந்நிகழ்வில் நினைவு உரைகள், சஞ்சிகை வெளியீடு என்பன இடம்பெறவுள்ளதாகவும் இவ்வைபவத்தினை இம்மாதத்தினுள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .