2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உலக வங்கி நிதியில் வீடுகள் அமைப்பதற்கான முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை கல்பிட்டி சியாப் மண்டபத்தில் இடம்பெற்றது.

நேற்றைய நிகழ்வில் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 294 தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

உலக வங்கியின் வீட்டுத் திட்ட புத்தளம் மாவட்ட அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளர் எம்.யாசின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புத்தளம் மாவட்டச் செயலாளர் எம்.கிங்ஸ்லி பெர்னாண்டோ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.

உலக வங்கியின் இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.

இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் 560 வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றில் புத்தளம், வண்ணாத்திவில்லு, முந்தல் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 266 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கெனவே புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவினால் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த முகாம்களுக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களே இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .