2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் சாஹித்திய விழா வரவேற்கத்தக்கது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் மாவட்டத்தின் கலை, கலாசார விழுமியங்களை கொண்ட சாஹித்திய விழா நடைபெறுவதானது வரவேற்கப்பட வேண்டியதொன்று என்று புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பொ்னாண்டோ தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட சாஹித்திய விழா நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட செயலகம், வலயக் கல்விப் பணிமனை என்பன  இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. தமிழ்,முஸ்லிம்,சிங்கள பாடசாலைகளின் மாணவர்களின் கலை நிகழ்சிகள் என்பன இங்கு இடம்பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் என்பனவற்றை மாவட்ட செயலாளர், சைல்ட் விஷன் நிறுவன முகாமையாளா எம்.ரூமைஸ், திட்ட அதிகாரி ஹனா, சமூக நம்பிக்கை நிதியத்தின் திட்ட அதிகாரி எம்.ஹிஜாஸ், இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பணிப்பாளர் எம்.மிஹ்லார், புத்தளம் கலை,கலாசார ஒன்றியத்தின் தலைவர் ஹேரல் மஞ்சநாயக்க ஆகியோர் வழங்கி வைத்தனர்.

புத்தளம்,முந்தல் பிரதேச செயலாளர்களான எம்.நபீல்,எம்.ஆர்.எம்.மலிக் ஆகியோரும் கலந்து கொண்டனர். புத்தளம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.எச்.பண்டார வரவேற்புரையினை நிகழ்த்தினார்.

மேலும் மாவட்ட செயலாளர் உரையாற்றுகையில்,

எதிர்கால சமூகத்திற்கு வரலாறுகள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல் கலை,கலாசாரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகளையும் உணர்த்த வேண்டும் என்றும் கூறினார்.








 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .