2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மழையினால் தொடர்ந்து புத்தளம் சாஹிரா கல்லூரியின் கற்பித்தலுக்கு தடங்கல்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் ரஹ்மத்துல்லா)

கடந்த சில தினங்களாக புத்தளம் பிரதேசத்தில்  பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று இரண்டாவது நாளாகவும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் கற்பித்தல் நடவடிக்கைளுக்கு தடங்கல்கள் ஏற்பட்டதாக பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.அன்வர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் சுமார் 3  அடிவரை பாடசாலைக்குள் காணப்பட்டதால் மாணவா்கள் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. நீரின் மட்டம் இன்று சற்று குறைந்த போதும் கற்றலுக்கான பூரண நிலை ஏற்படவில்லை.

அத்துடன் இன்று சுமார் 100 மாணவர்கள் அளவிலேயே பாடசாலைக்கு சமூகமளிததிருந்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை பாடசாலை மைதானத்தில் தேங்கி நிற்கும் வெள்ளத்தை வழிந்தோடச் செய்யாதவிடத்து இன்னும் சில தினங்கள் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படும் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

தற்போது பாடசாலையில் இடம்பெற்று வரும் வலய மட்ட க.பொ.த(சா/த) முன்னோடிப் பரீட்சைகள் இடம் பெறுவதாகவும், மழை, வெள்ளம் காரணமாக அப்பரீட்சைகள் நேற்று  நடைபெறவில்லை. அப்பரீட்சைகள்  இன்று  நடத்தப்பட்ட போதும் மாணவா்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையென்றும் அவர் கூறினார்.

இதேவேளை பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளுக்காக வேண்டி பத்தளம் மாவட்ட செயலாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பனவற்றின் அதிகாரிகளை பாடசாலைக்கு அனுப்பி, வெள்ள நீர் வழிந்தோடக் கூடிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .