2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வைத்தியசாலைகள் மூடப்படவுள்ளன

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இந்திக  ஸ்ரீ அரவிந்த)

வடமத்திய மாகாணத்திலுள்ள 3 வைத்தியசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர்  பேஷால ஜயரட்ண தெரிவித்தார்.

200 வைத்தியர்களுக்கு வெற்றிடம் உள்ளபோதிலும், வைத்தியர்கள் இன்றி வைத்தியசாலைகளை இயக்க முடியாது என்பதால் நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது என அவர்  கூறினார்.

இவ்விடயம் மத்திய சுகாதார அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தந்திரிமலை, ஹூருலுவேவ, ஹெலும்பேவா ஆகிய வைத்தியசாலைகளே விரைவில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .