Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ் )
புத்தளம் மாவட்டத்தின் மீன்பிடி கிராமமான உடப்பு கிராமத்தின் குடிநீர்த்தேவை எப்பொழுது தீர்த்து வைக்கப்படும் என்று உடப்பு மக்கள் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் உடப்பு கிராமத்திற்கு பல வருடங்களுக்கு முன்பு கீரியங்கள்ளி கிராமத்திலிருந்து குடிநீர் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டது.
இடையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக அந்த குழாய் நீர் விநியோகம் தடைப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடப்பு மக்கள் மீண்டும் குடிநீர்ப் பிரச்சினையை எதிர் கொண்டு வருகின்றனர்.
சுமார் மூன்று கி.மீ. தூரத்திற்கு அப்பாலுள்ள ஆண்டிமுனை, செல்வபுரம் பகுதிகளிலிருந்து குடிநீர் பௌசர்கள் மூலம் எடுத்து வரப்படுகின்றது. உடப்பு மக்கள் தமக்குத் தேவையான குடிநீரை இந்த பௌசர் மூலம் ஒரு குடம் ரூபாய் 5.00 செலுத்தி பெற்றுக் கொள்கினறனர்.
வறிய மக்களும் ஐந்து ரூபாய் செலுத்தியே தமக்குத் தேவையான குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர். வீட்டுப் பாவனைக்காக வீடுகளிலுள்ள கிணற்று நீரைப் பயன்படுத்தும் அம்மக்கள் உப்பு தன்மையான அந்த கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
கிணறுகள் இல்லாத மக்கள் அயலவர்களின் கிணற்று நீரைப் பெற்றே தமது வீட்டுப் பாவனையை நிறைவு செய்கின்றனர். அதேவேளை, குளிப்பதற்காக ஆண்டிமுனைக்கு பலர் நடந்தே சென்று வருகின்றனர்.
அருவா வெட்டும் காலத்தில் உடப்பு மக்கள் மேலும் பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர். அருவா வெட்டும் காலத்தில் படகுச் சேவைக்கு வேறாக பணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் உடப்பு மக்கள் தமது கவலையை தெரிவக்கின்றனர்.
குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு உடப்பு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
33 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago