2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஓய்வுப் பெற்ற நீதியரசருடன் சந்திப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(உடப்பு நிருபர்)

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தற்காலிக நிர்வாக சபைத்தலைவர் கே. செல்வராசா தலைமையிலான  குழுவினர் அண்மையில் ஓய்வுப்பெற்ற நீதியரசர் வி.ஜே.விக்னேஸ்வரனை சந்தித்தனர்,

இந்த சந்திப்பில் எதிர்வரும் 8ஆம் திகதி ஆலயத்தில் நவராத்திரி விழாவை சிறப்பான முறையில்  கொண்டாட வேண்டுமெனவும் ஆலயக் குழுக்களின் செயற்பாடுகள் இடையூறு விளைவிப்பதாக மேற்படி குழுவினர் நீதியரசரிடம் எடுத்துக் கூறினர்.

இவ்வாலய தர்மகத்தா சுப்பிரமணியம் செட்டியார் காமானதைத் தொடர்ந்து சமுதயாக் குழுக்கள் தன்னிச்சையாக இயங்குகின்றது. இதையிட்டு நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாதென்பதை விக்னேஸ்வரனிடம் இந்த தூதுக் குழுவினர் எடுத்துரைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .