2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் இடமாற்றங்களை இடைநிறுத்த உத்தரவு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்திலுள்ள சகல விதமான ஆசிரியர் இடமாற்றங்களையும் உடனடியாக இடைநிறுத்துமாறு வடமத்திய மாகாண முதலமைச்சரும் மாகாணக் கல்வி அமைச்சருமான பேர்டி பிரேமலால் திஸாநாயக மாகாண கல்விச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் இடம்பெருகின்ற ஆசிரியர் இடமாற்றங்கள் காரணமாக மாணவர்களின் கல்வி நிலைக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாத விடுமுறை வரை சகல விதமான ஆசிரியர் இடமாற்றங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர் விபரங்களை தனக்கு வழங்குமாறும் சகல வலய, மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .