2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று புதனிழமை புத்தளம் ஆலங்குடா பீ முகாமினை மையமாகக் கொண்டு சுனாமி எச்சரிக்கை வேலைத்திட்டத்தை நடத்தியது.

இன்று பிற்பகல் 3.36 மணிக்கு சுனாமி அனர்த்த எச்சரிக்கை மணி எழுப்பப்பட்டதும் பள்ளி  வாசல்களில் ஒலிபெருக்கி மூலமும்,ஆலயங்களில் மணி ஒலிக்கச் செய்தும் மக்களை விழிப்படையச் செய்து அவர்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸார், கடற்படையினர், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள் பிரசன்னமாகி மக்களை பாதுகாப்பாக எவ்வித விபத்துக்களும் இடம் பெறாதவாறு  பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்டதனை அடுத்து முன்னெச்சரிக்கை திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.




        
   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .