2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஸீ.சபூர்தீன்)

கெகிராவ மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தாக்கியதால் படுகாயமடைந்த மாணவன் கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் மாணவனின் செவிப்பறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை, கெகிராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கெகிராவ மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தர வணிகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .