2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: பிரதி சபாநாயகர்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

பால்மா பக்கெட்டுகளை கொள்வனவு செய்வதைவிட பசும்பாலை பயன்படுத்துவது பல வழிகளிலும் உடல், உளத்தின் செயற்பாடுகளுக்கு சிறந்ததென தெரிவித்துள்ள பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரத்ன, புத்தளம் கொட்டுக்கச்சி பண்ணையினை அரசு அபிவிருத்தி செய்யாவிட்டால் தனியாருக்கு கொடுத்து அதில் கால்நடைகள் மற்றும் பால் உற்பத்திகளை ஊக்குவிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

புத்தளம் வண்ணாத்தவில்லு பகுதியில் மிருக வைத்திய அதிகாரிகளுக்கான புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அலுவலகம் 70 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது. இதற்கான நிதியின் 40 இலட்சம் ரூபாவை வடமேல் மாகாண கால்நடை அமைச்சும், 30 இலட்சம் ரூபாவை வேல்ட் விஷன் நிறுவனமும் வழங்கவுள்ளது. இரண்டு கட்டமாக இப்பணிகள் இடம் பெறவுள்ளதன.

அங்கு மேலும் பிரதி சபாநாயகர் பேசும்போது -

நான் அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தேன். அங்கு எந்த கடைக்கு சென்றாலும் பசும் பால் ஒரு கிளாஸ் கிடைக்கும். ஆனால் எமது பிரதேசங்களில் அந்த நிலை இல்லை. எமது பிரதேசத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் வண்ணாத்தவில்லு பிரதேசசபை தலைவர் அசனா மரைக்கார், பிரதேச சபை உறுப்பினர் சுல்தான் மரைக்கார் உட்பட வடமேல் மாகாண பணிப்பாளர் திருமதி சாமா ஹேரத்தும் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .