2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரம் கைதிகள் உண்ணாவிரதம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள 50க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளின் குழுவொன்று உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களைக் கோரியுள்ள இவர்கள்இ சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம் தொடர்பாக தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதிநிதி ஒருவரை அனுப்பியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கைதிகளுக்கு தேவையானவற்றை வழங்க தவறியமையால் அனுராதபுர சிறைச்சாலை ஆணையாளரை இடமாற்ற கோரியே கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .