2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் பல உள்ளூராட்சிமன்றங்களில் தனித்து போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 27 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்டத்தில் ஆளும் கட்சியுடன் இணைந்தே அனைத்து உள்ளூராட்சிமன்றங்களிலும் எமது வேட்பாளர்களை நிறுத்த இருந்தோம். ஆனால் இறுதி  நேரத்தில்  புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி அமைப்பாளர்களின் நியாயமற்ற வேட்பாளர் ஒதுக்கீடுகள் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் பல உள்ளூராட்சிமன்றங்களில்  தனித்து  போட்டியிடவுள்ளது என்று வடமேல் மாகாணசபை உறுப்பினரும்    முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான எஸ்.ஏ.எஹ்யா தெரிவித்தார்.

புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேசசபை உட்பட ஆராச்சிக்கட்டு, சிலாபம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேசசபைகளுக்காக முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது.

இதேவேளை  கல்பிட்டி மற்றும் நாத்தாண்டிய பிரதேசசபைகளுக்காக ஆளும் கட்சியுடன் இணைந்து  முஸ்லிம் காங்கிரஸ்  வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். சிலாபம்  நகரசபை, ஆனமடு பிரதேசசபைகளுக்காக     முஸ்லிம் காங்கிரஸ்   வேட்பாளர்களை நிறுத்தாது.  ஆளும் கட்சி வேட்பாளர்களுக்காக  எமது  ஆதரவை வழங்கவுள்ளோம். அரசின் முழுமையான ஆதரவுடனேயே இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது என்று  எஹ்யா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .