2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் துரிதம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கான நஷ்டஈடு வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் மற்றும் உடமைகளுக்காக நிவாரணம் வழங்குவதற்காக அரசினால் 149 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சுமார் 65 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X