Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட வீதியொன்றுக்கு முதற் தடவையாக தமிழ் தலைவர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
பல வருட கால வரலாற்றை கொண்ட புத்தளம் நகர சபை பிரதேசத்திற்குற்பட்ட வீதியொன்றுக்கு, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் பெயர் முதற் தடவையாக சூட்டப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
1970ஆம் ஆண்டு பொலிஸாரினால் புத்தளம் பள்ளிவாசல் மீது துப்பாக்கி சுட்டு நடத்தப்பட்டு ஏழு பேர் கொல்லப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா மாத்திரமே குரல் கொடுத்தமையினாலேயே அவரின் பெயரை வீதியொன்றுக்கு சூட்டியதாக கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
இதேவேளை, புத்தளத்திற்கு பல வழிகளில் சேவையாற்றியமைக்காக புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளுக்கு முஸ்லிம் தலைவர்களான எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் பதியுதீன் மஹ்மூத் ஆகியோரின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
புத்தளம் நகர பிதாவாக கே.ஏ.பாயிஸ் தெரிவுசெய்யப்பட்டமையைடுத்து புத்தளம் வீதிகளின் பெயர்களில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. புத்தளம் நகர சபை எல்லைக்குள் தமிழ் மக்களும் செறிந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
Jaleel JP Tuesday, 09 August 2011 04:23 AM
பெரியோர்களை மதிக்கும் தன்மை உங்களிடம் இருப்பதால் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். நன்றி சார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago